[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தொழிலதிபரை கடத்தி கண்களைக் கட்டிவிட்டு தப்பியோடிய கொள்ளையர்கள்

businessman-kidnapped-in-kanchipuram-district

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழிலதிபரை கடத்திய கொள்ளையர்கள், அவரை மேல்மருவத்தூர் அருகே விடுவித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்னுமிடத்தில் முத்துக்குமார் என்பவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு கடையில் பணி முடிந்தபின் கார் மூலம் வீட்டிற்கு புறப்பட்ட அவர், சோத்துப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை திடீரென வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தினர். காவல்துறை விசாரணையில், மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் முத்துக்குமாரின் கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திய வேளையில், மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் காட்டில் முத்துக்குமாரின் கண்களைக் கட்டி இறக்கிவிட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பொதுமக்களின் தகவலின்பேரில் முத்துக்குமாரை மீட்ட காவலர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்ற தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close