[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

எப்படி கொள்ளை அடித்தோம்..? செய்துகாட்டிய கொள்ளையர்கள்.. 

theft-in-atm-in-chennai

சென்னை ஏடிஎம் மையத்தில் எப்படி கொள்ளை அடித்தோம் என்பதை வட மாநில கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் செய்து காட்டினர்.

சென்னை அண்ணாசதுக்கம் அருகே எழிலகத்தில் உள்ள எஸ்பிஐ ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் 5 புகார்கள் வந்திருக்கின்றன. இது குறித்து அண்ணாசதுக்கம் காவல் ஆய்வாளர் தீபா தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் வட மாநில இளைஞர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதனை அடுத்து பீகாரை சேர்ந்த மனோகர் குமார், முன்னாகுமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏடிஎம்மை பயன்படுத்தும் பயனாளர்கள் அருகே நின்று அவர்கள் பதிவு செய்யும் ரகசிய எண்ணை கண்காணித்து கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியிருக்கிறது. மேலும் கொள்ளையடித்த உடன் அவர்கள் விமானம் மூலம் பீகார் தப்பிச்சென்றதும் தெரியவந்திருக்கிறது. இந்த திட்டத்தை எப்படி அவர்கள் செயல்படுத்துகிறார்கள் என காவல் ஆய்வாளர் தீபா முன்னிலையில் அவர்கள் செய்து காண்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் இருவர் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close