[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பள்ளிச் செல்ல பழங்குடி மாணவர்களுக்கு உதவும் வனத்துறை

forest-department-to-help-tribal-students

கோவை மாவட்டம் மலைக்கிராமங்களில் வசிப்பவர்களின் குழந்தைகளை வனத்துறையினர் தங்களின் வாகனத்திலேயே பள்ளிகளுக்கு அழைத்து செல்கின்றனர். அவர்களின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர். 

கோவை மாவட்டம் போளூவாம்பட்டி வணச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலத்தை சுற்றி அமைந்துள்ள சிறுவாணி, போரேத்தி, வெள்ளபதி, பொட்டபதி, சாடிவயல், கல்கொத்தி, சீங்கிபதி, ஆகிய மலைக்கிராமங்களில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் நான்கு கிலோ மீட்டரிலிருந்து பத்து கிலோ மீட்டர் வரை பயணிக்க வேண்டியிருந்தது.  இதனால் வயதுக்கு வந்த மாணவிகள் பலர் பாதியில் கல்வி கற்பதை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. மேலும் மாணவர்களும் மேடு, பள்ளம் என மலைப்பாதைகளைக் கடந்து சென்று வீட்டுக்குத் திரும்புவதில் சிரமம் அடைந்து வந்தனர். குறிப்பாக, இரவு மற்றும் மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகிவந்தனர். 

ஆகவே கோவை மாவட்ட வனத்துறையினர், கோவை குற்றாலம் வனச்சூழல் சுற்றுலா சார்பாக பழங்குடி மாணவர்களை இலவசமாக பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் திட்டத்தை துவக்கியுள்ளனர். இதன் மூலம் மொத்தம் மூன்று பள்ளிகளுக்கு ஐம்பது மாணவ மாணவிகள் தினமும் வனத்துறையின் வாகனத்தின் அழைத்து செல்லப்படுகின்றனர். இதனால் பெற்றோகள் நிம்மதி அடைந்துள்ள  நிலையில் மாணவ மாணவிகளும் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close