[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தலைவர்களின் இன்றைய பரப்புரை

campaign-schedule-of-leaders-of-various-political-parties-for-the-day

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தலைவர்களின் இன்றைய பரப்புரைத் திட்டத்தைப் பார்க்கலாம். முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் இன்று பரப்புரை மேற்கொள்ளவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா பரமக்குடி, திருப்பூர்,கோவையில் பரப்புரையில் ஈடுபடுகிறார். தான் போட்டியிடும உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிக்கிறார். திருவாரூர், மன்னார்குடி,வேதாரண்யம், கீழவேளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் சீர்காழியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கரூர், காங்கேயம், தாராபுரம், வேடச்சந்தூரில் வாக்கு சேகரிக்கிறார். தேமுதிக மக்கள்நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஈரோடு மற்றும் கிணத்துக்கடவில் பரப்புரை செய்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தஞ்சை, திருவையாற்றில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையிலும் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் திருவாரூரிலும் வாக்கு சேகரிக்கின்றனர். பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி பென்னாகரத்திலும் பாமக நிறுவனர் ராமதாஸ் பவானி, அரவக்குறிச்சியிலும் பரப்புரை செய்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close