[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

அழிக்கப்பட்ட பழமையான ஓவியங்கள் ! பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

ancient-wall-paintings-in-kanchipuram-varadaraja-perumal-temple-are-white-washed-shocked-pilgrims

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பழமையான ஓவியத்தின் அருமை, பெருமை தெரியாமல் ஓவியத்தின் மீது சுவிட்ச் போர்டு வைத்து சிமென்ட் பூச்சால் அழிக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களின் ஒன்று. அழகிய சிற்ப வேலைப்பாடுகளும், சுவர் ஓவியங்களும், பழமையான கல்வெட்டுகளும் உடைய இக்கோவில், 28 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வையத்திருமாளிகை சுவரில் மூலிகை ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. தசாவதாரங்கள், பள்ளி கொண்ட பெருமாள், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை உட்பட திருமாலின் பெருமைகளை விளக்கும் ஓவியங்கள் இவை. மூலிகை இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வண்ணக் கலவைகளால் கி.பி.1569-ம் ஆண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

இந்த ஓவியங்களின் அருமை, பெருமை தெரியாதவர்களால், கிறுக்கப்பட்டு, சீரழிந்து வந்தன. இந்த ஓவியங்களை புதுப்பித்து பாதுகாக்க, இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள், கோரிக்கை விடுத்தனர். இதனால், மூலிகை ஓவியங்களை புதுப்பிக்க, 2015ல், இதையடுத்து இந்த ஓவியங்களை ரூ.65 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தொல்லியல் துறையில் ஓய்வுபெற்ற வடிவமைப்பாளர் சம்பத்குமார், ஓய்வு பெற்ற அருங்காட்சியக ஆய்வாளர் ஜெகந்நாதன் தலைமையிலான குழுவினர் இப்பணிகளை மேற்கொண்டனர். அப்போது இந்த ஆய்வின்போது, சிதைந்த ஓவியங்களுக்குப் பின்னால், அதற்கும் முந்தைய காலகட்டத்தில் வரையப்பட்ட மிகப்பழமையான மூலிகை ஓவியங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஓவியத்தை பிரித்தெடுக்கும் பணிகள் தொடங்கின. சிதைந்த நிலையிலிருந்த ஓவியத்தை பருத்தி ஆடையில் பதிந்து தனியே பிரித்தெடுத்தனர். அப்பகுதியில் திருவாச்சி ஓவியம் பாதியாக தெரிந்தது. ஓவியத்தின் மீதுள்ள அழுக்குகளை, ரசாயன பூச்சுகளின் உதவியோடு அகற்றி, அதை உருவாக்கிய காலநிர்ணயத்தை அளவிடும் நடவடிக்கையையும் அப்போது தொடங்கியது. இந்த பாரம்பரிய ஓவியங்களிளின் அருமை தெரியாமல் தற்போது, மலை மீது உள்ள மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில், ஜன்னல் ஓரத்தில் உள்ள சுவரில் வரையப்பட்டிருந்த சுமார் 500 வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியத்தின் மீது, மின் ஒயரிங் சுவிட்ச் பாக்ஸ் அமைக்கப்பட்டு, சிமென்ட் கலவை மூலம் பூச்சு வேலை நடந்துள்ளது. இதனால், கலைநயமிக்க ஓவியம் அழிந்து உள்ளது. மிகவும் அரிதான ஓவியத்தை, அதேபோன்று வரைவது அரிதான செயல். ஆனால், அதை பொக்கிஷம் போல், பாதுகாக்காமல் அழித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close