[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

அணைப் பாதுகாப்புச் சட்டம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

cm-edappadi-palanisamy-letter-to-pm-modi-for-assembly-bill

அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது 2010ஆம் ஆண்டு வரைவு அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததையும், அவரின் கோரிக்கையை ஏற்று 2010ஆம் ஆண்டை வரைவு அணைப் பாதுகாப்பு மசோதா கைவிடப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த மசோதாவை மாநிலங்களை கலந்து ஆலோசித்த பின்னரே இயற்ற வேண்டும் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அணைகள் பாதுகாப்புச் வரைவுச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறித்து ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களுக்கிடையில் அணைப் பாதுகாப்பு மசோதா தொடர்பான ஒத்த கருத்து ஏற்படும் வரை, அந்த வரைவு மசோதாவை நிறுத்தி வைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாநிலங்களை ஆலோசித்தே இந்தச் சட்டத்தை இயற்றவேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரதமருக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலும் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close