[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

ஆடம்பர ஆசைகாட்டிய மோசடிக் கொள்ளையன் : சிபிஐ போல் பிடித்த கில்லாடிகள்!

public-and-victim-was-arrested-money-fraud-criminal-acquest-in-covai

கோவையில் காவல்துறை பிடிக்கமுடியாத பண மோசடிக் கொள்ளையனை பாதிக்கப்பட்டவர்களே சேர்ந்து பிடித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கோவையில் ஒய்ட் காலர் சங்கம் (WHITE COLLAR ASSOCIATION) என்ற பெயரில்,  நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கோவையில் கடந்த 3 வருடங்களாக நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், 600க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 50 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாழ்வின் எதிர்காலத்திற்காக பல்வேறு திட்டங்களை வைத்துக்கொண்டு, பணம் முதலீடு செய்பவர்களிடம் ஆடம்பர வாழ்க்கையை அமைத்து தர இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார் சிவக்குமார். இப்படியே பலரை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார். 

ஆள் பார்ப்பதற்கு பெரிய மனுஷன் போலவும், வெள்ளை நிற உடையுடன் பெரும் வசதி படைத்தவர் போலவும் தன்னை மக்களிடம் காட்டிக்கொண்டுள்ளார். இதனால் பலரும் இவரை நம்பி பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவருடன் முருகேஷ், சேகர், லட்சுமி, விமலா ஆகியோரும் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இறுதியில் மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு வீடு மாற்றிக்கொண்டு ஓடிவிட்டார் சிவக்குமார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் 4 மாதங்களாகியும் காவல்துறையினரால் மோசடி செய்தவரை கண்டுபிடிக்க முடியாததால், இறுதியில் பாதிக்கப்பட்டவர்களே களத்தில் இறங்கி மோசடிக் கொள்ளையனை பிடித்துள்ளனர். இதுதொடர்பாக கூறும் பாதிப்பட்டர்களில் ஒருவரான ஜெயசீலன், தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ரூ.1.75 கோடி பணத்தை முதலீடு செய்து ஏமந்ததாக கூறுகிறார். 

தீபா என்ற பாதிக்கப்பட்ட பெண் கூறும் போது, “ரூ.1.10 லட்சம் முதலீடு செய்தால், ரூ.1.90 தருவதாக அவர் கூறினார். அல்லது ரூ.20 ஆயிரம் தந்தால் ரூ.40 ஆயிரம் தருவதாக கூறினார். முதலில் கட்டும் தொகைக்கு கூறியது படியே பணத்தை திருப்பி தருவார். பின்னர் நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், அனைவரும் முழுத்தொகையை முதலீடு செய்வார்கள். அதன்பிறகு நிதிநிறுவனம் சார்பில் சுற்றுலா அழைத்து செல்வார்கள். பின்னர் ஆடம்பர வாழ்க்கையை அமைத்து தருவதாக கூறுவார்கள். இதேபோல பலரிடம் பணம் பெற்றனர். ஆனால் திடீரென ஒருநாள் தலைமறைவாகிவிட்டார். 4 மாதங்களாக எங்கியிருந்தார் எனத்தெரியாது” என்று கூறினார்.

முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை, நிதி நிறுவனத்தின் உரிமையாளரும் தலைமறைவாகிவிட்டார். காவல்நிலையத்தில் புகார் அளித்தும், 4 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் பாதிக்கப்பட்டவர்களே சேர்ந்து சிவக்குமாரை தேடத்தொடங்கியுள்ளனர். இதில் பாதிப்படைந்த ஒருவரின் உறவினரான நவீன் என்பவர், அறிவுப்பூர்வமாகவும், காவல்துறை போலவும் செயல்பட்டு சிவக்குமாரை பிடிக்க உறுதுணையாக இருந்துள்ளார். சிவக்குமாரை தேடத்தொடங்கிய இவர்களுக்கு, பல தேடல்களுக்குப் பிறகு சிவக்குமார் வீடு மாற்றிச்சென்ற போது பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் எண் கிடைத்துள்ளது. அதன்மூலம் ஆர்.டி.ஓ அலுவலகத்தை நாடி ஓட்டுநரை கண்டுபிடித்துள்ளனர். 

பின்னர் அவர் தந்த தகவலின் அடிப்படையில் சிவக்குமார் திருச்சியில் இருப்பதை அறிந்து, அவரது வீட்டை கண்டுபிடித்துள்ளனர். பாதிப்படைந்தவர்கள் திடீரென சிவக்குமாரை வீட்டில் வைத்து மடக்க, பணம் முழுவதையும் ஒரு நாளில் தந்துவிடுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அன்று இரவே வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு தப்பிவிட்டார். இப்படியே 4 ஊர்களுக்கு சிவக்குமார் தப்பிச்சென்றுள்ளார். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் அசராமல் சிவக்குமாரை தொடர்ந்து தேடிப்பிடித்துள்ளனர். இதற்கு மேல் சிவக்குமாரை நம்பக்கூடாது என முடிவு செய்த அவர்கள், அவரை கோவை மாநகர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக கூறும் குற்றவியல் நிபுணர்கள் சிலர் சதுரங்க வேட்டை போல பல திரைப்படங்கள் வந்தாலும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மக்கள் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது எனக்கூறுகின்றனர். மேலும் ஆசை வார்த்தைகளை கூறி விரைவாக பணம் சம்பாதிக்க வழிகாட்டுவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close