[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

இன்னும் கொஞ்ச நாள் அதே பள்ளியில் இருப்பார் பகவான்..!

teacher-baghavan-get-transferred-soon

வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலையில், மாணவர்கள் சுமூக நிலைக்கும் திரும்பும் வரையில் அதே பள்ளியில் பணியாற்ற ஆசிரியர் பகவானுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 260 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியராக பகவான் உள்ளிட் 4 பேர் உள்ளனர். இதில் பகவான் என்ற ஆங்கில ஆசிரியரை பணியிடம் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19-ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்வாசலுக்கு பூட்டுப் போட்டு பள்ளி முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து 20-ந்தேதி மீண்டும் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவான் பணியிட மாற்ற உத்தரவு நகலை வாங்கிக் கொண்டு செல்ல முயன்றார். அப்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பகவானின் காலை பிடித்துக் கொண்டு ‘இங்கிருந்து நீங்கள் மாறுதலாகி செல்லக்கூடாது. நீங்கள் பாடம் நடத்தினால் நாங்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவோம்’என சொல்லிக் கொண்டே கதறி அழுதனர். ஆசிரியர் இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கண்கலங்கியது அனைவரையும், ஆசிரியர் பகவான் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. சமூகவலைத்தளத்திலும் பகவான் பலரால் கொண்டாடப்பட்டார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இதுதொடர்பான செய்தியை ஒளிபரப்பு செய்தது. தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் பகவானிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு உத்தரவுப்படி பணியிட மாற்றத்திற்கான ஆணையை அருங்குளம் பள்ளியில் கொடுத்து ஆசிரியர் பகவான் சேர்ந்து விட்டதாகவும்,  மாணவர்கள் சுமூக நிலைக்கு திரும்பும் வரையில் இதே பள்ளியில் பணியாற்ற வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close