[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

“பசுமை வழிச் சாலையால் சுற்றுச்சூழல் பயன்பெறும்” - மத்திய அரசு அதிகாரி

environal-will-not-be-affected-by-salam-to-chennai-expressway-union-ministry-official

சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பயன்பெறும் என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து அமைச்சக அதிகாரி அருண் நரேந்திரநாத் தெரிவித்துள்ளார்.

சென்னை-சேலம் இடையே, 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாகக் கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பசுமை வழிச்சாலை நிச்சயம் வந்தே தீரும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பயன்பெறும் என்று மத்திய அரசின் அதிகாரி அருண் நரேந்திரநாத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பசுமை வழிச்சாலை திட்டத்தின் மூலம் 6 கோடி லிட்டர் டீசல் சேமிக்கப்படும் எனவும், இதன்மூலம் 17 கோடி கிலோ கிராம் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு குறையும் என கூறியுள்ளார். இது 38 ஹெக்டேர் நிலத்தில் 75 லட்சம் மரம் வளர்ப்பதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 10 ஆயிரம் லாரிகள், 10 ஆயிரம் இதர வாகனங்கள் பயன்பெறும் என்றும் அருண் நரேந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close