[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

தாமிரபரணி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத சிசு: போலீஸ் விசாரணை 

unknown-baby-found-in-nellai

நெல்லையில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசுவின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்றுப்பகுதி பெரும்பாலும் ஆள்நடமாட்டம் இன்றி காணப்படும். ஆற்றில் செடிக்கொடிகள் அடர்ந்து காணப்படும் பகுதியில் ஏதோ மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் சிசு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல்  தெரிவித்தனர். அங்கு வந்த 108 ஊழியர்கள் சிசுவை கைப்பற்றி பரிசோதித்தனர். சிசு இறந்து கிடப்பதை அறிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசுவைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை ஆற்றில் வீசப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close