[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை

a-bio-bag-introduce-in-kovai

பிளாஸ்டிக் பைகள் தடைக்கு பிறகு தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோ-பைகள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

கடந்தாண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் முதல்முறையாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் மக்காச்சோளம் உள்ளிட்ட உணவு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மக்கும் பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பைகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்களின் நம்பிக்கையை பெறவும் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பசுமை அங்காடி ஒன்று செயல்பட தொடங்கியுள்ளது. முதலில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், பிளாஸ்டிக் தடை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்குப் பிறகு விற்பனை அதிகரித்துள்ளது என்கிறார்கள் அங்காடியின் பொறுப்பாளர்கள்.  

மூன்று மாதத்தில் மக்கிவிடுவதுடன் எளிதாக தண்ணீரில் கரைந்து விடும் தன்மை கொண்ட இந்த பயோ பேக். உடல்நலன் மட்டுமின்றி விலங்குகளுக்கும் சுற்றுசூழலுக்கும் ஏற்றவை என்பதால் கோவை மாநகரில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகள் என பல பெரிய நிறுவனங்கள் தற்போது இந்த வகை பைகளை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்துகின்றனர். இருப்பினும், சிறிய கடைகள், சாலையோர கடைகள் இந்த வகையான பைகளை பயன்டுத்துவதற்கு கூடுதல் காலங்களாகும் என்றும், அதற்கான பணியில் தன்னார்வலர்களும், மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர் பயோ பொருட்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருபவர்கள். 

பிளாஸ்டிக் பைகளின் உறுதித் தன்மைக்கு ஏற்ப இந்த வகை பைகள் பல்வேறு வடிவங்களில்,ரூ.3 முதல், ரூ.1.50பைசா வரையில் அவரவர் வசதிக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.  மார்க்கெட்டில் போலி பைகளை தவிர்க்க, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாங்கி பயன்படுத்த அறிவுரை தருகிறார்கள் ஆர்வலர்கள். 

இந்தப் பைகள் கோவையில் தயாரிக்கப்படுவதால் அந்தத் தொழிற்சாலையில் மொத்த விற்பனையாளர்கள் கொள்முதல் செய்துக்கொள்ளலாம்.  நகர்ப்புறங்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னைக்குத் தீர்வுக்காணும் வகையில் உள்ள இந்தப் பைகளை பயன்படுத்தினால் மண்ணிற்கும் மனிதர்களுக்கும் வலம் சேர்க்கும் என்கிறனர் பயோ பேக் ப்ரியர்கள்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close