[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

tamilnadu-cm-edappadi-palanisamy-letter-to-pm-modi

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். வேலை தருவதாக கூறி தமிழக மீனவர்களை அழைத்துச்செல்லும் ஈரான் வணிகர்கள் உரிய ஊதியத்தை வழங்குவதில்லை என்றும் முதல்வர் கடித‌த்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் வணிகர்கள் தமிழக மீனவர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பறித்து வைத்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரானில் பிடித்து வைக்கப்பட்டுள‌ள தமிழக மீனவர்கள் உணவு, தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றும் முதல்வர் பழனிசாமி தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close