[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

“போலீஸ் உடையை அணிய வெட்கப்படுறேன்” எனப் பேசிய சின்னத்திரை நடிகை கைது

tamil-tv-serial-actress-nilani-nila-arrested

ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக நிலானி கருத்து தெரிவித்தார். சின்னத்திரை நடிகையான நிலானி படப்பிடிப்பின் போது வெளியிட்ட அந்த வீடியோவில், “நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 10 பேரை கொன்றுள்ளனர். அமைதியான வழியில் போராடுகிறோம். நான் சூட்டிங்கில் இருக்கிறேன். இல்லை என்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன். நான் இந்தக் காவல்துறை உடையை அணிந்திருப்பதற்கு வெட்கப்படுறேன். உடம்பு கூசுது. இந்தப் போராட்டம் இதோடு முடியப்போவதில்லை. இனிமேல்தான் ஆரம்பம். தமிழர்கள் தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர். அதுதான் அவர்களின் திட்டம். இலங்கை போல் தமிழகத்திலும் தமிழர்களை கொல்ல திட்டுமிட்டுவிட்டனர்.

             

மக்களை நெஞ்சில் சுட்டுக்கொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். போராட்டத்தை ஒருங்கிணைத்த 8 பேர் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நமது வளங்கள் அனைத்தும் திருப்பட்டுள்ளன. நாமும் எப்படியும் இறந்துவிடுவோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அரசு வேலைகளை புறக்கணியுங்கள். விவசாயிகளையும், காவலர்களையும் அரசு மோத வைத்துள்ளது. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். 

இதுதொடர்பாக நிலானி மீது வடபழனி காவல்நிலையத்தில் காவல் உடை அணிந்து மோசடி செய்தல்(419), அவதூறு பரப்புதல்(500), கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுதல்(153) உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று நடிகை நிலானியை கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலானியை வடபழனி போலீசார் கைது செய்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close