[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சிறுவர்களால் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு : குழந்தை காப்பகம் மீது புகார்

child-home-boys-sexual-harassed-girl-in-thiruvannamalai

தனியார் குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு, உடன் தங்கியிருந்த சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு பல சிறுவர்கள், சிறுமிகள் ஒன்றாக இருந்துள்ளனர். அங்கு தங்கியிருந்த 11 சிறுமிகளுக்கு, உடன் தங்கியிருந்த சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருவண்ணாமலை அனைத்து பெண்கள் காவல்நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேணுகா புகார் அளித்துள்ளார்.  

புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்த சென்றனர். ஆனால் காப்பகத்தின் உரிமையாளர்கள் ரவி மற்றும் சுஜாதா அங்கிருந்து தப்பிவிட்டனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதற்கிடையே காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பதாலும், ஊட்டசத்து குறைபாடுகள் உள்ளதாலும் அவர்களை அரசு இல்லத்திற்கு மாற்றுமாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close