[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

ஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை வென்ற முதல் தமிழர்..!

first-indian-to-win-apple-design-award

ஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வென்று தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மென்பொருள் வல்லுநர்கள் மாநாட்டில் தமிழகத்தின் தேனியைச் சேர்ந்த இளைஞருக்கு ‘ஆப்பிள் டிசைன் விருது’ கிடைத்துள்ளது. உலக அளவில் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்பு திறனை வெளிப்படுத்திய இந்த மாநாட்டில் தமிழர் ஒருவருக்கு விருது கிடைத்துள்ளது. தேனியை சேர்ந்த ராஜா விஜயராமன் தனக்கு கிடைத்திருக்கும் விருது குறித்து பேசும்போது, “விருது எனக்கு கிடைத்து மிகப் பெரிய ஆச்சரியம் மற்றும் சந்தோஷம். பெரும்பாலான மற்ற நாட்டினர் நினைப்பது இந்தியருக்கு சிறப்பான அளவில் படைப்புத் திறன் இல்லை என்பதுதான். நான் அப்படி நினைக்கவில்லை. என் தொலைதூர கனவு நினைவாகியிருக்கிறது” என்றார்.

12-ம் வகுப்பிற்கு பின் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்கிறார் ராஜா விஜயராமன். ஆனால் அவருக்கும் படிக்கும்போதே அவ்வளவு விருப்பம் இல்லாமல் தான் படித்துள்ளார். பொறியியல் படிப்பிற்கு பின்னர் 3 மாதம் அனிமேஷன் கோர்ஸ் படித்துள்ளார். இதன் பின் ரஜினி நடித்துள்ள ரோபோ உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் தற்போது அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close