[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

ஃபேஸ்புக் காதல்; பெண் வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன்

facebook-love-a-young-man-with-a-knife-in-the-stomach-before-the-woman-s-house

திருமணம் செய்ய மறுத்ததால் காதலி வீட்டு முன்பு கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பேஸ்புக் காதலால் நடந்த விபரிதம் நிலக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். டிப்ளமோ படித்துவிட்டு கரூரில் டயர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பேஸ்புக் மூலம் நிலக்கோட்டையைச் சேர்ந்த எம்.காம்., பட்டாதாரி பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. பேஸ்புக் மூலமாகவே 3-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். சுரேஷ்குமார் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

அவர்கள் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த வாரம் பெற்றோருடன் சுரேஷ்குமார் நிலக்கோட்டையில் உள்ள காதலி வீட்டிற்க்கு முறைப்படி பெண் கேட்டு வந்துள்ளார். பேஸ்புக் மூலம் அறிமுகமான தங்கள் காதலை சொல்லி 3-ஆண்டுகள் காதலித்ததாகவும் இதனால் தங்கள் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படியும் பெண்ணின் பெற்றோரிடம் சுரேஷ்குமார் பெண் கேட்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

தனது காதலியைத் தேடி மீண்டும் நிலக்கோட்டைக்கு வந்துள்ளார் சுரேஷ்குமார். காதலியின் வீட்டுக்கு சென்ற சுரேஷ்குமார் காதலியை காணவேண்டும் என அவரை அழைத்துள்ளார். காதலியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்ப மறுத்து சுரேஷ்குமாரை கண்டித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறி தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் மூன்று முறை குத்தி கொண்டுள்ளார் சுரேஷ்குமார். நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் பெற்றோர் சுரேஷ்குமாரை தூக்கிக் கொண்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 முதலுதவி அளித்த மருத்துவர்கள் வயிற்றுப்பகுதி கிழிந்து குடல் தெரியும் அளவிற்க்கு காயம் இருப்பதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக் காதலால்நடந்த இச்சம்பவத்தால் நிலக்கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close