[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

தொழிற்சாலையில் தீவிபத்து

a-fire-in-a-food-product-factory

திருவள்ளூர் அருகே உணவு பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

பொன்னேரி அடுத்த உத்தண்டிகண்டிகை பகுதியில் உணவு பொருட்கள் தயார் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் காற்றின் வேகம் காரணமாக மற்ற இடங்களுக்கும் தீ பரவியது. தகவலறிந்த 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் கோதுமை, கடலை உள்ளிட்ட மாவு பொருட்களும், உலர் திராட்சை, பாதாம், முந்திரி பருப்பு என 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தீவிபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close