[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

முதலில் மிளகாய் பொடி தூவல் ! பின்பு விரட்டி வெட்டிப் படுகொலை - திண்டுக்கல்லில் பயங்கரம்

dindugul-youth-horror-murder-police-suspects-pre-hostility

 

திண்டுக்கல்லில் காவல்நிலையம் அருகே பட்டப்பகலில்  மிளகாய் பொடி தூவி இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். குமரேசன் மீது  கொலை,கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக குமரேசன் சிறை சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் தெற்கு காவல்நிலையம் அருகே உள்ள ஆர்.வி.நகர் 3வது தெருவில் நடத்து வந்துகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இவரை வழிமறித்தது. குமரேசனின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய அந்தக்கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. எதிர்பாராத தாக்குதலால் நிலைக்குலைந்த குமரேசன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். அவரை தொடர்ந்து தாக்கிய அந்தக்கும்பல் தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குமரேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தச் கொலை சம்பவம் நடத்திருக்கலாம் என்ற காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குமரேசன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு லக்சையா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. பட்டபகலில் காவல்நிலையத்திலிருந்து 100மீட்டர் தூரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close