[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

பல பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டவர் கொடூரக் கொலை: நடந்தது என்ன?

there-was-an-illegal-relationship-with-many-women-that-person-killed-someone

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மது வாங்கி கொடுத்து, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சுபின் (21), சுமிதா (19) இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எந்நேரமும் மது மட்டுமல்லாமல், இவருக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவிவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த ஜோன்ஸ் முழு நேரமும் மது அருந்துவதும் பல பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடுவதுமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மனைவி விவகாரத்து செய்தது முதல் ஒழுங்காக வீட்டிற்கும் போகாத ஜோன்ஸ், இரவு நேரங்களில் கோயில்கள் அல்லது கிடைக்கும் இடங்களில் படுத்து உறங்கியுள்ளார். 

முன்கோபம் கொண்ட ஜோன்ஸ் மது அருந்திவிட்டு பலருடன் சண்டையிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள தோட்டத்தில் இன்று கழுத்து மற்றும் மார்பு பகுதி அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஜோன்ஸ் சடலமாகக் கிடந்துள்ளார். இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த ஜோன்ஸின் உடலைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த ஒருமணி நேரத்திற்கு மேல் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜோன்ஸ் கொலைசெய்யப்பட்டு கிடந்த இடத்தை மது பிரியர்கள் மது அருந்தும் கூடாரமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்து தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் இந்தக் கொலைக் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஜோன்ஸுக்கு யாரோ மர்ம நபர்கள் மது வாங்கி கொடுத்து அவர் போதை ஆன பிறகு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஜோன்ஸுக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்த காரணத்தால் சிலருடன் அவ்வப்போது தகராறும் இருந்து வந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்தப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் சமூக விரோதிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் இந்தக் கொலை நடந்திப்பதாகவும் மேலும் இது போன்ற கொலைகள் நடைபெறாமல் இருக்க மார்த்தாண்டம் காவல்துறையினர் இந்தப் பகுதியில் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இதுபோன்ற கொலைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close