[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

4 வருட பகை படுகொலையில் முடிந்தது..! கொரட்டூரில் நடந்த கொடூர சம்பவம்..!

one-killed-in-chennai

சென்னை கொரட்டூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. வயது (53). இவருக்கு  அப்புன், மணிபாரதி, விவேக், அரவிந்தன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பணம் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மஞ்சுளாவை ரவியின் முதல் மகன் அப்புன் தலையில் வெட்டி உள்ளார்.

இந்த முன்விரோதம் கடந்த நான்கு வருட காலமாகவே தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் மகன் ஆகாஷை(22) அப்புன், அரவிந்தன், விவேக் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்திருக்கின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்நிலையில் கொலைமுயற்சிக்கு பழி வாங்கும் விதமாக நேற்று இரவு 9.30 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அரவிந்தனை வெளியே இழுத்து 10பேர் கொண்ட கும்பல் வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலியே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் படுத்திருந்த குடியரசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொரட்டூர் காவல் துறையினர் அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்கு கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர்.

இச்சம்பவம் தொடர்பாக விக்கி, ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோரை பிடித்து கொரட்டூர் காவல்துறையினர்.விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகிலேயே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்கள்: நவீன், செய்தியாளர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close