[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

கோவையில் தொடங்கிய ‘ஸ்மார்ட் சிட்டி’ சைக்கிள் திட்டத்திற்கு முழுக்கு 

smart-city-bicycle-project-is-stoped-in-coimbatore

நகர வளர்ச்சி காரணமாக  எரிபொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன; விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே தனி நபர் வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகவே, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வாடகை அடிப்படையில், சைக்கிள் பகிர்வு திட்டத்தை செயல்படுத்த, கோவை மாநகராட்சி முடிவு செய்தது. சீன நிறுவனமான 'ஒஃபோ' இதனை செயல்படுத்த தயாராக உள்ளதாக முன் வந்தது. அந்த நிறுவனத்துடன் கைகோர்த்தது கோவை மாநகராட்சி. பரீட்சார்த்த முறையில் ஆர்.எஸ்.புரத்தில், கடந்த மார்ச் 3ல் இத்திட்டம் துவக்கப்பட்டு, 50 இடங்களில் சைக்கிள் வழங்கப்பட்டது.

'ஓபோ' நிறுவன மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் மட்டுமே, சைக்கிள் 'லாக்'கை திறக்க முடியும். சைக்கிள் எங்கெங்கு பயணிக்கிறது என்பதை, ஜி.பி.ஆர்.எஸ்., தொழில் நுட்பத்தால், கண்காணிக்க முடியும். ஆகவே யாரும் திருட முடியாது என்ற நம்பிக்கையில், முன் பணம் வசூலிக்காமல், சைக்கிளை வழங்கினர்.

சைக்கிள் ஒரு மாதத்துக்கு இலவசம் என்று கூறியதால், பலரும் ஆர்வமுடன் ஓட்டிப்பார்த்தனர். இந்நிலையில் இளைஞர்கள் புறநகர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். சிலர், தங்களது வீட்டுக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டனர். இலவச சைக்கிள் போல் பயன்படுத்தினர். சைக்கிளில் பதித்துள்ள 'பார்கோடு' மூலமாக, நிற்கும் இடத்தை கண்டறிந்து, மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், சைக்கிளை பயன்படுத்த, எல்லை வரையறுக்கப்பட்டது. அதன் பின்னும்  சைக்கிள் 'லாக்'கை சிலர் உடைத்து பயன்படுத்தினர். கூடையை பிய்த்தெறிந்தனர். பூட்டை உடைக்க முடியாதவர்கள், குளத்துக்குள்ளும், ரோட்டோரத்திலும் தூக்கி வீசினர். பூட்டை உடைத்த சிலர், காரில் ஏற்றி, வெளியூருக்கு எடுத்துச் சென்றனர். இன்னும் பலர், சைக்கிளின் வண்ணத்தை மாற்றி, பயன்படுத்தி வந்து உள்ளனர். இது, கோவை மக்களை நம்பி களமிறங்கிய, நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் முதலீடு செய்த அந்த நிறுவனம், இழப்பை தாங்க முடியாமல், கோவையை விட்டு விடைபெற முடிவு செய்துள்ளது. எதிர்கால சந்ததியின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்ட அற்புதமான திட்டம், தோல்வி அடைந்துள்ளது. 

பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக இந்தத் திட்டத்தை முற்றிலும் மாநகராட்சி தற்போது கைவிட்டு உள்ளது. இதனால் இதற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. மேலும் இந்தத் திட்டம் குறித்து  விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து இருப்பதாகவும் , இந்தச் சிறப்பு திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்து உள்ளனர். 

புதிய பல திட்டங்கள் கொண்டு வரும் போது மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது. எனவே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திட்டங்களை போதிய திட்டமிடலும் அமல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close