[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

பார்வையற்ற முதியவருக்கு அன்பு காட்டும் சிறுமி: ஒரு உணர்ச்சிகரமான கதை

a-sensational-story-about-the-girl

பெற்ற தாய்-தந்தையைக்கூட முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் மனிதர்கள் பலர் இருக்க, தனிமையில் வாழும் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் மீது அன்பு செலுத்தி அரவணைத்து வருகிறார் ஒரு சிறுமி. இந்தச் சிறுமியின் செயல்பாடுகளை கண்ட மேலும் சிலர் அந்த முதியவருக்கு உதவ முன் வந்துள்ளனர். 

முதுமையில் தனிமை.. வறுமையின் கொடுமை...என தன் வாழ்நாட்களை கடத்தி வருகிறார் கண் பார்வையற்ற முதியவர் நல்லப்பன். உறவினர்கள் இருந்தும் தனக்கான வேலைகளை இந்த வயதிலும் தளர்வின்றி செய்து கொள்வது அவரது தன்னம்பிக்கை. அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை தவிர வருவாய் ஆதாரம் வேறில்லை.

சேலம் டால்மியா நகரில் தனக்கென்று சொந்தமாக உள்ள ஒரு பாழடைந்த குடிசையில் வசித்து வரும் இவர் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை தனியே நடந்து சென்று தனக்கான உதவித்தொகையை பெற்று வருகிறார். அப்படி அவர் தனியே நடந்து செல்லும்போது அவருக்கு கிடைத்து அன்பான ஒரு புதிய பந்தம்தான் சிறுமி தீட்சா.

தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் தீட்சா, முதியவரை கண்டு அவர்மீது இரக்கம் கொண்டு உதவி செய்யத் தொடங்கினார். தன்னை அன்போடு அரவணைத்த குழந்தையின் முகத்தை காணமுடியவில்லை என்ற குறை இருந்தபோதிலும் முதியவர் நல்லப்பனின் மனக்கண் பார்வையில் அந்தச் சிறுமி பேத்தியல்ல; ஒரு தாயாக மாறியிருக்கிறாள்.  

தாத்தாவை இன்று பார்ப்போம் என்றால் தனக்கான மதிய உணவை சேர்த்து எடுத்துகொண்டு வந்து அவருக்கு கொடுப்பது, அவரை கைபிடித்து அழைத்து செல்வது என அன்பும் அரவணைப்பும் எல்லையற்றதாய் மாறிய நிலையில் முதியவர் நல்லப்பனின் வீட்டிற்கு சென்ற தீட்சா அந்தக் குடிசையை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளார்.. எப்போது விழுமோ என்று தெரியாத மண் சுவர், ஒழுகும் கூரை. ஒரு கூடு போன்ற குடியிருப்பு. இந்த நிலையை இயன்ற வரை மாற்ற வேண்டும் என்பதே தீட்சாவின் எண்ணமாய் மாறியது. சிறுமி தீட்சாவின் செயல்பாடுகள் அப்பகுதியை சேர்ந்த பலரது கவனத்தை ஈர்க்க, தற்போது முதியவர் நல்லப்பனின் குடிசையை சீரமைத்து கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் சிலர்..கண்களில் ஒளி  இல்லை என்றாலும் முதியவருக்கு அன்பின் அர்த்தத்தை உணர்வாய் உணர்த்தியுள்ளார் சிறுமி தீட்சா. 

தகவல்கள் :  மோகன்ராஜ் ,செய்தியாளர்- சேலம்

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close