[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி

வேளாண் படிப்புகளில் சேர 46 ஆயிரம் பேர் விண்ணப்பம் 

tamilnadu-agricultural-university-updates

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் இளநிலை படிப்புகளில் சேர தற்போது வரை 46 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் உள்ள 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும் 35  சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்படுகிறது. இந்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 18 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர தற்போது வரை  46,621 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கு ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து வருகிற 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்வோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. அதன் பின்னர் தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close