[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

இராமநாதபுரத்துக்கு கிடைக்குமா மருத்துவக் கல்லூரி ?

petition-filed-for-medical-college-in-ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவகல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கில் தமிழக சுகாதாரதுறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் " ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.ராமநாதபுரம் டவுன் பகுதியில் மட்டும் ஒன்றரை லட்சத்திற்க்கும் அதிகளவு மக்கள்தொகை உள்ளது, ராமநாதபுரத்தில் 23 வார்டுகளுடன் தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

”ஒவ்வொரு வருடமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் 303 மரணங்கள் ஏற்படுகின்றன, தினசரி 2500 க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை வருகின்றனர்.அவரச சிகிச்சை நோயாளிகளை வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்புகின்றனர்,மேல் சிகிச்சைக்கு அனுப்பு போது போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள்,முதியவர்கள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் தற்போதைய படுக்கை வசதி 642  இருக்க வேண்டும்.அதேசமயம் மருத்துவ கல்லூரிக்கு குறைந்தபட்சம் 300 படுக்கைகள் இருக்க வேண்டும்.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் தலைமையகங்களில் மருத்துவ கல்லூரி ஒன்றைக் கொண்டு வர எந்த தடையும் இல்லை” என மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக பேசிய மனுதாரர் திருமுருகன் இந்தியா மருத்துவ விதிமுறைகளின்படி ஒவ்வொரு மருத்துவகல்லூரிக்கும் 110 கி.மீ.,தொலைவு இருக்க வேண்டும் ; ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து பகுதிகளிலும் இருந்து சராசரியாக 120 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 20 மருத்துவக் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது.சிறு மாவட்டங்களில் கூட அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்,தனுசுக்கோடி, தேவிபட்டினம், பெரியபட்டிணம், உத்தராகோசமங்கை, உப்பூர் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளது,ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களுக்கு பல பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்,தினசரி 1000 முதல் 1500 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை  பெறுகின்றனர். ராமநாதபுரம் அரசு தலைமை  மருத்துவமனையில் போதுமான உள்கட்டமைப்பு இல்லை.30.05.2018 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நிறுவகோரி அதிகாரிகளுக்கு மனுஅனுப்பினேன்.ஆனால் எனது தொடர்பாக அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை.எனவே மே 30 ஆம் தேதி அனுப்பிய மனுவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவகல்லூரி மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தேன் என்றார். 

திருமுருகனின் மனு இன்று நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதாரதுறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் .

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close