[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

ஸ்டெர்லைட் அரசாணை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி

sterlite-go-madurai-high-court-displeasure

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட 15 வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. அதில் வைகோ தொடர்ந்த வழக்கும் ஒன்று. இன்றைய வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய இசைவாணையை திரும்பப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எங்களுக்கு திருப்தி இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு முறையான கொள்கை முடிவு எடுத்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 20 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனித உயிர்கள் விலை மதிப்பற்றது என தெரிவித்தனர். மனித உயிரின் மதிப்பு வெறும் 20 லட்சம் தானா..? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. இதிலிருந்தே ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதி சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருவதாக நீதிபதி தெரிவித்தனர். இதனையடுத்து வழக்குகள் அனைத்தும் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தில் அதாவது கடந்த மே மாதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close