[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

பாலியல் வன்கொடுமை செய்தது நம்பும்படியாக இல்லை : நீதிமன்றம்

cancellation-of-father-s-death-penalty-high-court-madurai

ராமேஸ்வரத்தில் 9 வயது மகளை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

ராமேஸ்வரம் கரையூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து-தனுஷ் பானு தம்பதியினர். கணவன் - மனைவி இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தகராறு எழுந்தது. இதையடுத்து தனுஷ்பானு, தனது 9 வயது மகளையும் மகனையும் கரையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இந்நிலையில் 23.4.2013 அன்று மாரிமுத்துவின் 9 வயது மகள் ராமேஸ்வரம் கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராமேஸ்வரம் கோயில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.

இந்நிலையில் 3 ஆண்டுக்கு பிறகு மகளை பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை கடலில் வீசியதாக மாரிமுத்துவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி மாரிமுத்துவுக்கு 3.11.2017 அன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வாதிடுகையில்,  சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுக்கு பிறகே மனுதாரரை கைது செய்து போலீஸார் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். சாட்சிகள் மனுதாரர் கடற்கரையில் தனது மகளை மடியில் போட்டு அழுதுக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதை வைத்து அவர்தான் மகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார். இதையேற்ற நீதிபதி மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close