[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

the-possibility-of-heavy-rainfall-in-5-districts-in-tamilnadu

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவரம் அடைந்து வருவதை அடுத்த வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் கர்நாடக மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் தொடர் கன மழை நிலவி வருவதாகவும், பருவமழை தீவிரம் அடைந்து வருவதை அடுத்து கோவை,நீலகிரி,தேனி,திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம்  சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 13 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதுபோல தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், தேவாலாவில் தலா 9 செ.மீட்டர் மழை பதிவாகி  உள்ளது.

மேலும் செங்கோட்டையில் தலா 7செ.மீட்டர் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்,தரை காற்று பலமாக வீசக் கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close