[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

புகாரை வாங்க மறுத்த காவலர்கள்; தொடர் அலைக்கழிப்பால் பரிதவிக்கும் பெற்றோர் !

guards-who-refused-to-get-the-complaint

சென்னை மெரினா கடற்கரையில் மாயமான சிறுவர்கள் குறித்து புகார் தெரிவித்த பெற்றோர் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுடன், காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை மெரினா கடலில் நேற்று பிற்பகலில் நண்பர்களுடன் குளித்த சந்தோஷ், பிரியதர்ஷன் அலையில் சிக்கி மாயமாகினர். இதை அறிந்த பெற்றோர், பிள்ளைகளை தேடித்தர கோரி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். ஆனால் சிறுவர்கள் காணாமல் போன இடம் தங்கள் எல்லைக்குட்பட்டது அல்ல என கூறி மெரினா காவல்நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். அவர்களும் சாக்கு போக்குகளை கூறி புகாரை வாங்காமல் அலைக்கழித்ததால், ஏற்கனவே பரிதவிப்பில் இருந்த பெற்றோர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். 

இதுகுறித்து தகவலறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மெரினா காவல்நிலைய காவலர்கள் தடுத்து நிறுத்தியதோடு, இங்கு செய்தி சேகரிக்க கூடாது என்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கண்ணீருடன் நிற்கும் பெற்றோரின் புகாரை வாங்க மறுத்ததுடன், செய்தியாளர்களுடனும் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close