[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

“காவல்துறையே எங்களை போராட்டம் செய்ய தூண்டுகிறது” - சேலம் பொதுமக்கள் 

opposition-to-the-8way-road-in-salem-two-person-arrested

சேலத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பொதுமக்களை தூண்டி வருவதாக இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சேலம் முதல் சென்னை வரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசின் நிதியின்கீழ் 8 வழிச்சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 274 கிலோமீட்டர் தொலைவு அமைக்கப்பட உள்ள இந்தச் சாலைக்காக 20ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 கிலோமீட்டர் தொலைவு இந்தச் சாலை அமைய உள்ளதால் அது அமையவுள்ள பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் சாலை அமைப்பதற்கான நிலத்தை அளவீடு செய்ய வந்த வருவாய் துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்களை, முற்றுகையிட்ட பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதம் நடத்தி அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.

 இதனையடுத்து இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ள சிலரது வீடுகளுக்கு சென்று போராட்டக்காரர்கள் சிலரை இன்று அதிகாலை இழுத்துச் சென்றனர். 

குப்பனூர் பகுதியில் ஐயந்துரை, முத்துகுமார், நாராயணன் ஆகியோரை அம்மாபேட்டை காவல் நிலையத்திலும், சித்தனேரி பகுதியை சேர்ந்த ரவி என்பவரை கெண்டலாம்பட்டி காவல் நிலையத்திலும் வைக்கத்துள்ளனர். காவல்துறையினரால் அழைத்துச் சென்றவர்கள் அனைவரும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களை அதிகாலை அழைத்துச்சென்று போது விசாரணை முடிந்தவுடன் உடனடியாக அனுப்பி வைப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் பலமணிநேரம் ஆகியும் அவர்களை திருப்பி அனுப்பவில்லை என்று காவல்நிலையம் முன்பு கூடியிருந்த உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், தங்களது நிலம் பறிபோவதாக ஏற்பட்ட வேதனையில் அளித்த பேட்டியை கொண்டு காவல்துறையினர் மிரட்டி அழைத்துச் செல்வதாகவும், காவல்துறையினரே தங்களை போராட்டம் நடத்த தூண்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில் முத்துக்குமார் என்பவர்மீது, பொதுமக்களை போராட்டம் நடத்த தூண்டியதுபோல் பேசியதாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் கைது விசாரணைக்காக அழைத்து வந்தவர்களில் நாம்தமிழர் கட்சியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை அன்னதானப்பட்டி காவல்நிலையத்தினர் கைது செய்தனர். மேலும் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close