[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

'காவிரி நீரில் அரசியல் வேண்டாம்'- துரைமுருகன் 

do-not-politics-in-cauvery-water-duraimurugan

விவசாயிகள் நலனில் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, ஆணையம் மூலம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

திமுக முதன்மைச் செயலாளார் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வெளிவந்ததில் இருந்து 113 நாட்களில் ஆக்கப்பூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும் என்று கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர், திமுகவை குறைகூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நீரை திறக்க வைப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்று துரைமுருகன் சாடியுள்ளார்.

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என முதலமைச்சர் கூறுவது வேதனை அளிப்பதாகவும், தன் தோல்வியை மறைக்க திமுக மீது குறைகூறி திசை திருப்ப முனைவது அதைவிட வேதனை தருவதாக துரைமுருகன் கூறியுள்ளார். விவசாயிகள் நலனில், அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close