[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

பூ விற்று படிக்க வைத்த அப்பா : காதல் தோல்வியால் தற்கொலை செய்த மகன்

nellai-engineering-college-student-committed-suicide-for-love-failure

நெல்லையில் காதல் தோல்வியால் பொறியியல் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள அழகனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்பாலன். இவர் காவல்கிணறு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். செந்தில்பாலனின் தந்தை பூ விவசாயம் செய்து, அவரை படிக்க வைத்துள்ளார். தினமும் வியாபாரத்திற்காக அதிகாலையில் பறிக்கப்படும் பூக்களை தோவாளை பூ மார்கெட்டிற்கு செந்தில்பாலன் தான் கொண்டு சென்றுள்ளார். அதேபோல் இன்றும் தனது இருசக்கர வாகனத்தில் தோவாளை மார்க்கெட் பூவை கொடுத்து விட்டு, திரும்பி ஊருக்கு வரும் போது காவல்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் வருகைக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த சரக்கு ரயில் முன் திடீரென பாய்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பின்னர் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் செந்தில்பாலன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், செந்தில்பாலன் ஒரு பெண்ணை நீண்ட நாட்கள் காதலித்து வந்ததும், தனது காதல் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் இறப்பது முன்னால் அவர் தனது மொபைல் போனில் இதயம் உடைந்தது போல் முகப்புப் படத்தை வைத்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close