[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

‘ஆசைக்கு ஒரு குழந்தை இல்லையே’.. ஏக்கத்தில் சென்னை தம்பதி தற்கொலை

chennai-couple-suicide

ஆசைக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் தம்பதியினருக்குள் குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. ஏகப்பட்ட நவீன மருத்துவ வசதிகள் வந்தாலும் எல்லோராலும் அதிக செலவில் அந்த வசதியை பெற முடிவதில்லை. இந்நிலையில் குழந்தையில்லாத விரக்தியால் சென்னையில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை மெரினா அருகே உள்ள அன்னா சத்யாநகரை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 30. இவரது மனைவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 28. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் எல்லோரும் ‘இன்னும் குழந்தை இல்லையா.. வயசாகிச்சுலா.. உடனே டாக்டர பாருங்க’ என வாய்க்கு வந்தபடி அறிவுரை கூற தம்பதியினர் கூடுதலாக மனை உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுதாவிற்கு இந்த தாக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது. இதனால் வெளியே சுப காரியங்களுக்கும் கூட செல்லாமல் அதனை தவிர்த்தே வந்திருக்கிறார்.

இந்நிலையில் குமார் வெளியே சென்ற நேரத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்ததும் தனது மனைவி சடலமாக தூக்கில் தொங்கியதை கண்ட குமாரும் ‘சுதா இல்லாமல் எப்படி வாழப்போகிறோம்’ என்ற ஏக்கத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த தலைமைச் செயலகம் போலீசார் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இல்லாத விரக்தியில் சென்னையில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியோடு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close