[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்

'பேரவையில் விவாதிப்பது மரபல்ல'- முத‌லமைச்சர்

arguing-in-the-assembly-is-not-a-tradition-eps

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆணையம் விசாரணை மேற்கொள்ளும் போது அது குறித்து பேரவையில் விவாதிப்பது மரபல்ல என முத‌லமைச்சர் ‌பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேரவையில் இன்று பூஜ்ஜிய நேரத்தில் தூத்துக்குடி விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சார் ஆட்சியர் போட்ட உத்தரவு மீறப்பட்டுள்ளதாகக் கூறினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக அவையி‌ல் அதிகளவில் விவாதம் நடைபெற்றுள்ளதாகவும், விசாரணை ஆணையத்தின் இருக்கும் விஷயத்தை அவையில் விவாதிக்க முடியாது என்றும் கூறி வாய்ப்பளிக்க‌ மறுத்தார். 

இதனை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்ளும் ஒரு விஷயத்தை அவையில் விவாதிப்பது மரபல்ல என்றும், எந்த‌ தகவலாக இருந்தாலும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close