[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

ஏடிஎம்மில் இருந்து நூதன திருட்டு

theft-of-money-from-atm

கோவையில் ஒரே ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் தனியார் வங்கி கணக்கில் இருந்து இன்று அதிகாலை 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்மந்தப்பட்ட வங்கிக்கும், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதேபோல் மேலும் சிலர் புகார் அளித்தது தெரியவந்தது. புகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்ததில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் கடந்த 2ஆம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பதும், அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. 

உடனே, சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சைபர் கிரைம் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் மூடினர். சுமார் பத்து பேரின் வங்கிக்கணக்கில் இருந்து 40,000 ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். ஸ்கிம்மர் மூலம் இந்தp பணத்திருட்டு நடந்துள்ளதா என சை‌பர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close