[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

என் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா? - அற்புதம்மாள் வேதனை

perarivalan-mother-arputhammal-requested-to-tn-govt-to-take-action-on-releasing-his-son

பேரறிவாளனை அரசு சிறையில் அடைத்து 27 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த மாதம் தந்தை உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் ஒரு மாத ஜாமீனில் வந்திருந்தார். பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தன் மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூன் 11ஆம் தேதியோடு பேரறிவாளனை அரசு சிறையில் அடைத்து 27 ஆண்டுகள் முடியப்போகிறது என்றும் வாழ்நாளுக்குள் ஒரே புதல்வன் பேரறிவாளன் விடுதலை ஆகி வருவாரா எனும் அச்சம் அதிகமாகிறது என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

மேலும், “ஏன் கொலைக் குற்றம் சுமத்தினார்கள். ஏன் தண்டித்தார்கள்.  ஏன் 27 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள் என்று புரியவில்லை?.  எனக்கு வயது 71 என் துணைவருக்கு 77. நான் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா;  எனக்குள்ள நோய்கள் தரும் வலியைக் தாங்க முடியாமல் அழுவதா;  என் முதுமையால் அலைந்து திரிய இயலாமையை எண்ணி அழுவதா;  இறுதிக் காலத்தில் நோய்களாலும் முதுமையாலும் அல்லல்படும் என் துணைவருக்கு உதவிடாது அவரைப் பிரிந்து இருக்க வேண்டியதை எண்ணி அழுவதா; என்னால் இயலவில்லை” என்று அற்புதம்மாள் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close