[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

'காலா'வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

supreme-court-rejected-kaala-movie-ban-petition

நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காலா படத்தின் தலைப்பு, கதை தன்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், படம் நாளை வெளியாக இருப்பதால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கரிகாலன் என்ற தனது படத்தை காலா என்ற பெயரில் படமாக்கியுள்ளதாக ராஜசேகரின் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற விடுமுறைகால அமர்வு, மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் இல்லை என்றும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close