[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கடத்தல்காரர்களிடம் பெண் குழந்தையை கொடுத்த மனைவி - கத்தி முனையில் கணவர்!

a-baby-from-kidnapped-mother-by-edge-of-knife-in-virudhunagar

விருதுநகரில் பட்டப்பகலில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்திலக். இவர் அல்லம்பட்டியில் உள்ள சண்முகக்கனி என்பவருக்கு சொந்தமான பருப்பு ஆலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சண்முகக்கனியிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவரது மகனை கடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு ராஜ்திலக்கை பகடைக்காயாக பயன்படுத்தவும் அந்தக் கும்பல் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ராஜ்திலக் வீட்டிற்கு சென்ற அந்தக் கும்பல், கத்தியைக்காட்டி அவரை இருசக்கர வாகனத்தில் கடத்திக்கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு வைத்து ராஜ்திலக்கை மிரட்டிய அந்தக் கும்பல், சண்முகக்கனியின் 5 வயது மகனை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். சிறுவனை அழைத்து வரும் வரை, ராஜ்திலக்கின் ஒன்றரை வயது மகளை பிணையமாக தங்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுமாறும் அந்தக்கும்பல் மிரட்டியுள்ளது. இல்லையென்றால் கத்தியால் குத்தி கொன்றுவிடுவோம் என அச்சுறுத்தியுள்ளது. வேறுவழியின்றி தனது மனைவிக்கு போன் செய்த ராஜ்திலக், இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு பேரிடம் மகளை கொடுக்குமாறு கூறியுள்ளார். அவர் கூறியவாறே, அவரது மனைவியும் குழந்தையை கொடுத்துள்ளார். பின்னர் ராஜ்திலக்கை விடுவித்த அந்தக் கும்பல், சண்முகக்கனியின் மகனை அழைத்து வந்த பின்னர், ‘உன்னையும், உன் மகளையும் விட்டுவிடுவோம்’ என ராஜ்திலக்கிடம் கூறியுள்ளனர். 

அங்கிருந்து புறப்பட்ட ராஜ்திலக், நீண்ட நேரம் என்ன செய்வதென்று குழம்பியுள்ளார். பின்னர் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி, புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் படி, உடனே புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வனப்பகுதிக்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு ஒருவர் மட்டும், ராஜ்திலக்கின் குழந்தையுடன் இருந்துள்ளார். 

அவரை உடனே மடக்கிப்பிடித்த காவலர்கள், அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. அவருடன் வந்த இருவர் பிரபு மற்றும் அசோக் என்பதும், இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. தப்பி ஓடிய பிரபு மற்றும் அசோக் ஆகியோரை 2 தனிப்படை அமைத்து காவலர்கள் தேடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close