[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

மதுரையில் ரவுடி வெட்டிப் படுகொலை

rowdy-killing-in-madurai

மதுரையில் பிரபல ரவுடி வேல்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வேல்குமார். இவர் நேற்று இரவு அப்பகுதியில் தனது நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். சுமார் 8.30 மணியளவில் அங்கு வந்த மர்ம கும்பல் வேல்குமாரை சரமாரியாக வெட்டியது. எதிர்பாராத இந்த தாக்குதலால் வேல்குமார் நிலைக்குலைந்தார். அவரை சரமாரியாக வெட்டியக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இதுதொடர்பாக தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close