[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

நண்பனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் - கொலையில் முடிந்த கதை

a-friend-killed-his-friend-for-sexually-harassment-in-chennai

சென்னையில் நண்பனை கொன்று விட்டு, அவரது நண்பனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு அருகில் உள்ள குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் பிரபு. இவர்கள் இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். இளைஞர்களான இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக விமல்ஜா என்பவருக்கு சொந்தமான, சென்னை ரிச்சி தெருவில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் வேலை பார்த்து வந்தனர். இரவுப் பணியின் போது, சில சமயங்களில் கடையில் உள்ள குடோனில் இருவரும் தங்கியுள்ளனர். அவ்வாறு நேற்றிரவு இரண்டு பேரும் ஒன்றாக தூங்கும் போது, சரவணன் பிரபுவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட, கோபமடைந்த சரவணன் பிரபுவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது நண்பனையே கொன்றுவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியிலும், காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்திலும் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் சரவணன். சம்பவம் இரவில் நடந்ததால், நீண்ட நேரம் வரை யாருக்கும் தெரியவில்லை. பின்னர் காலையில் குடோனை சுத்தம் செய்யும் பெண் வந்தபோது, இருவரும் இறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அந்தப் பெண் கடையின் உரிமையாளர் விமல்ஜாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த விமல்ஜா, காவல்துறையினருக்கு தகவல்கொடுக்க அவர்களும் அங்கு விரைந்துள்ளனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இருவருக்கும் இடையே இருந்த பிரச்னைகள் தொடர்பாக, அதே கடையில் வேலை செய்தவர்கள் மற்றும் அதேபகுதியில் வசித்த மற்ற இளைஞர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் உண்மை தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கும் சந்தை சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close