[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார் 

sexual-harassment-of-the-girl-in-kovai

தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன்  தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கோவை வால்பாறை முடீஸ் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தவள்ளி. இவர் தனது கணவர் மற்றும் மன வளர்ச்சிக் குன்றிய மகளுடன் கெஜமுடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவர்  வேலைக்குச்  செல்லும் போது இவரது மனவளர்ச்சிக் குன்றிய 16 வயது மகளை தனியாக வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். கடந்த மாதம் இவரது மகள்  வீட்டில் இருந்த போது,  அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் என்பவர் இவரது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மகளை  மீட்டதாகவும் கூறப்படுகிறது.  இதனையடுத்து  மூக்கன் மீது முடீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் முருகானந்தவள்ளி. ஆனால் காவல்துறையினர் மூக்கன் மீது வழக்குப்பதிவு செய்து விட்டு 1000 ரூபாய் அபராதம் வாங்கிக் கொண்டு வெளியில் விட்டுவிட்டதாக தெரிகிறது. \

இதனையடுத்து இது குறித்து உரிய  நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கடந்த முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்தவர்கள்,  ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட மண்ணெணையுடன் வந்தனர். அப்போது காவல்துறையினர் சோதனையில் பையில் இருந்த மண்ணெண்ணை பறிமுதல் செய்தனர். பாலியல் தொல்லை அளித்த  மூக்கன் அடிக்கடி தன்னிடமும் சிறுமி சிந்தாமனியிடமும் தவறாக நடக்க முயல்வதாகவும்  எனவே அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்ணீர் மல்க மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செல்லப்போவதில்லை எனக் கூறி தங்களது துணிகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close