[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

சாக்கு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து!

fire-at-rajapalayam-plastic-factory

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ‌ஆலையின் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. 

முறம்பு கிராமத்தில் ராம்ஜி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் சாக்கு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆறு மணிய‌ளவில் மின்கசிவு காரணமாக அந்த ஆலையில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்புத்துறை வாகனங்களளில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். 

பிளாஸ்டி‌க் கொழுந்து விட்டு எரிந்ததால், மேலும் 4 தனியார் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடை பெற்றது. இந்த தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ விபத்து காரணமாக சுற்றுவட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு கரும்புகை பரவியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close