[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஆபத்தான நிலையில் குற்றால பேரூராட்சி தங்கும் விடுதிகள்

courtallam-hotel-accommodation-is-dangerous-conditions

ஆபத்தான நிலையில் குற்றால பேரூராட்சி தங்கும் விடுதிகள் சீர் செய்து  சுற்றுலா மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் ஏழைகளின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் இங்கு சீசன் காலமாகும் இந்த சீசன் நேரங்களில் இங்கு வெளி மாவட்டங்கள் , வெளி மாநிலங்கள் , வெளி நாடுகளில் இருந்து வருடத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பயணிகள் வசதிக்காக குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் தென்காசி சாலை தங்கும் விடுதி, செங்கோட்டை சாலை தங்கும் விடுதி, மல்லிகை லாட்ஜ், ரோஜா காட்டேஜ், மெயின் அருவி குடியிருப்புகள், அருவி காட்டேஜ் என  பல குடியிருப்புகள் பேரூராட்சி சார்பில் குறைந்த வாடகையில் விடப்பட்டு வந்தன.  

ஒவ்வொன்றிலும் சுமார் 20 அறைகள் சில காட்டேஜ்கள் என 100 க்கும் அதிகமான தங்கும் இட வசதிகள் இருந்தன. ஆனால் தற்போது சுமார் 10 வருடங்களுக்குள் இந்தக் குடியிருப்புகள் பராமரிப்பில்லாமல் மிகவும் மோசமான நிலையில் சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படுகின்றன. தென்காசி சாலை தங்கும் விடுதியில் பல அறைகளில் ஜன்னல் கதவுகள் கதவுகள் கூட சரியாக இல்லை, அதே போல் காங்கிரீட் பெயர்ந்து விழுந்த நிலையில் மோசமாக உயிர் பலி வாங்கும் நிலையில் உள்ளது. அதே போல் மல்லிகை தங்கும் விடுதியில் சுமார் 25 அறைகள் உள்ளது. இந்த அறைகள் முழுவதும் சுவர்கள் உடைந்தும் காங்கிரீட் மேல் தளங்கள் பெயர்ந்தும் மிக ஆபத்தான நிலையில் உள்ளன.  ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் தான் இங்கு பாதுகாப்பு பணிக்காக வரும் காவல்துறை காவலர்கள் மிகவும் வேதனையாக தங்கவைக்கப்படுகின்றனர்.

உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இவர்கள் இங்கு தங்குகின்றனர். மேலும் அருவி காட்டேஜ் மிகவும் மோசமடைந்து. மரங்கள் வளர்ந்தும் பயன்படுத்த இயலாத சூழ்நிலையில் உள்ளதால் இது அப்படியே விடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பகுதி இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கு கூடாரமாக உள்ளதாகவும் மேலும் இந்த வழியாக செல்வோர் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடனே செல்லும் நிலையிலும் உள்ளது. பல லட்சங்கள் செலவில் பயணிகள் நலனுக்காகவும் பேரூராட்சியின் வருவாயை உயர்த்தும் நோக்கிலும் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் வர்ணம் பூசவோ பெயர் பலகைகள் எழுதவோ கூட இயலாத நிலையில் உள்ளது.

தனியார் தங்கும் விடுதிகள் சீசன் காலங்களில் கொள்ளை லாபம் பார்த்து வருவதும் சீசன் நேரத்தில் அதுவும் டிமாண்டாக இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் பராமரிப்பு இல்லாததால் அரசு விடுதிகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் இவற்றை பராமரித்து அனைத்து வசதிகளை ஏற்படுத்தி பல சுற்றுலா தலங்களில் உள்ளது போல் ஆன்லைன் புக்கிங் வசதிகள் செய்வது மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடி கண்காணிப்பில் அறைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close