[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

“போலீஸ் வன்முறையை கண்டித்த ரஜினி இப்போது மாற்றி பேசுவது ஏன்?” - நெட்டிசன்கள்

rajinikanth-said-about-different-opinion-about-police

காவல்துறையினர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள மாறுபட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டம் நடத்தும்போது, அதனை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறுவதாக கூறி அதனை எதிர்த்து நாம்தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்பினர் சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர். அன்றைய தினம் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு இளைஞர் காவல்துறையினரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் சீமான் மற்றும் அவரது ஆதவராளர்களும் காவல்துறையினருடன் வாதம் செய்திருந்தனர். 

இந்த வீடியோவை போராட்டத்திற்கு அடுத்த நாளான 10ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, காவல்துறையினர் சார்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்திருந்தனர். இதுதொடர்பாக சம்பவத்திற்கு அடுத்த நாளான 23ஆம் தேதி வீடியோவில் பேசி ட்விட்டரில் வெளியிட்டிருந்த ரஜினி, “ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம். உளவுத்துறை உட்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வி. காவல்துறையின் வரம்பு மீறின, சட்டத்திற்கு புரம்பான, மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.”  என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சென்னை வந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரை தாக்கிய பின்புதான் பிரச்னையை தொடங்கியது. போலீஸ் உடையில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று ஆவேசமாக தெரிவித்தார். கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் காவல்துறையினரின் மிருகத்தனம் எனக்கூறிவிட்டு, தற்போது ரஜினிகாந்த் இவ்வாறு கூறியிருப்பதை நெட்டிசன்கள் சமூக வளைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். போலீஸ் வன்முறையை கண்டித்த ரஜினி, இப்போது மாற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close