தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினியை யாரென்று கேட்ட நிலையில், ‘நான்தான்பா ரஜினிகாந்த்’ என்ற வார்த்தை ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இன்று காலை 9 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்ட ரஜினி, 10.30 மணி அளவில் தூத்துக்குடி விமானம் நிலையம் சென்றார். அங்கு அவரது ரசிகர்கள் பெருமளவில் கூடியிருந்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். அத்துடன் காயமடைந்தோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை வழங்குவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் ரஜினி தெரிவித்தார்.
இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தபோது, ஆமா நீங்க யாருங்க? என இளைஞர் ஒருவர் வெறுப்புடன் கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே நகரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ‘நான்தான்பா ரஜினிகாந்த்’ என்ற வார்த்தை இன்று பிற்பகல் முதல் தொடர்ந்து ட்விட்டர் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் ‘சூப்பர் ஸ்டாரு யாரு கேட்டா? சின்னக்குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலை ரஜினிக்கு சமர்ப்பிப்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!