[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

கல்யாணத்துக்கு கண்டிஷன் போட்ட பெனிலா ! அது என்ன ?

a-girl-who-is-a-companion-for-marriage

இரு மணங்களும் இணைவது தான் திருமணம். இதில் கணவன் கையால் அடிவாங்குற மனைவியும் இருக்காங்க மனைவி கையில் அடிவாங்குற கணவனும் இருக்காங்க. தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடி போல்  ‘ என்ன அவ அடிக்க... அவ என்ன அடிக்க.. என்ன அவ அடிக்க.. அவ என்ன அடிக்க’ என்ற ரகங்களும் உள்ளது. இந்த கணவன் மனைவி சண்டையெல்லாம் எப்படி வருதுன்னு நினைக்கிறீங்க. பெரிய பிரச்னை எல்லாம் ஒன்னும் இருக்காது. சின்ன சின்ன விஷயங்களுக்காக தான் இந்த சண்டைகள் எல்லாம் இருக்கும். சாப்பட்டுல உப்பு இல்ல...  நான் வந்தது கூட தெரியாம டிவி பாக்குற.. சமைக்காம என்ன சீரியல் வேண்டி இருக்கு... மற்ற பெண்களின் அழகை மனைவியிடம் ரசித்துக்கூறி மாட்டிக்கொள்வது இது போன்ற காரணங்களுக்காக தான் சண்டை வருகிறது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் ஒரு திருமணத்திற்கான பேனரில் பெனிலாவின் பத்து கட்டளைகள் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. யார் அந்த பெனிலா என்ன அது பத்து கட்டளை என்று பார்த்தால் அந்த பேனரிலே எல்லா விவரமும் உள்ளது. அந்தப்பேனரை பார்க்கும் போது எட்வின் என்பவருக்கும் பெனிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் என்ற விவரம் தெரிகிறது. மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தான் அதில் ஹைலைட் இதற்கு மணமகனும் சம்மதம் தெரிவித்துள்ளார். 

என்ன அந்த 10 கட்டளைகள் என்று கேட்கிறீர்களா. இதோ அந்த கட்டளைகள் உங்களுக்காக

1. உன்னுடைய மனைவி நானாகிறேன், மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது
2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது.
3. இரவு 8.30 மணிக்கு கிச்சன் க்ளோஸ்
4. இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ் க்ளோஸ்
5. தேங்காய் எண்ணை. ஷாம்பு, சோப்பு துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது.
6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.
7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்
8. சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம், கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது
9. உறக்கத்தில் குறட்டை விடவோ, சத்தம் போடவோ கூடாது.
10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.என்று இடம்பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close