[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

சிசிடிவியில் சிக்கிய கார் திருடர்கள்

car-theft-caught-by-cctv-camera

சென்னையில் சிசிடிவி காட்சிகள் மூலம் கார் திருடன் பிடிப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இவரது கார் கடந்த 6ஆம் தேதி திருடுப்போனது. இதுகுறித்து சிவக்குமார் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் காரை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனைக்கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் காரை திருடிச்சென்றது விழுப்புரத்தை சேர்ந்த கணேசன் மற்றும் பிரகாஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் குறித்த விவரங்களை சேகரித்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பிரகாஷை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். கணேஷ் தலைமறைவானதையடுத்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். திருடப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close