[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு: அதிமுக ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து நீக்கம்

aiadmk-removes-hariprabhakar

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து  தெரிவித்ததால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஹரி பிரபாகரன் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளராக இருந்தவர் ஹரி பிரபாகரன். தூத்துக்குடியில் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ஹரி பிரபாகரன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். 

அவரது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்ததையடுத்து அதனை நீக்கிவிட்டார். மேலும் இதுதொடர்பாக மற்றொரு பதிவில் காலையில் நான் பதிவிட்ட கருத்து என்னுடைய சொந்த கருத்து என்றும் இதற்கு கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய கருத்தால் பலர் வேதனையடைந்ததாக நான் கேள்விபட்டேன். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டார்.

இதற்கிடையில் அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை மற்றும்  கோட்பாடுகளுக்கு முரணாகவும் களங்கம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்  ஹரி பிரபாகரன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. கட்சியினர் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close