[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

சென்னை அருகே எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து: ரயிலில் இருந்து குதித்த 7 பேர் காயம்

chennai-trivandrum-express-derailed

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பட்டாபிராம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது ரயில் பெட்டியில் இருந்து கீழே குதித்த 7 பேர் காயமடைந்தனர். இவர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட 4 வழித்தடங்களில் இரண்டில் ரயில் சேவை தொடங்கியது. இதனை அடுத்து பெங்களூர், கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் 6 மணி நேரம் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அடைந்தது.

விபத்து நடைபெற்ற இடத்தை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். மீட்பு பணியில் ரயில்வே மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close