[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

கூடலூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

tourist-bus-accident-in-ooty-dead-4

உதகமண்டலம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த ‌31 பேர் உதகமண்டலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர். கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை என்னுமிடத்தில் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, அங்கிருந்து கீழிருக்கும் சாலையில் விழுந்தது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் என்று தெரிய‌வந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் மேல் சிகிச்சைக்காக மைசூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் உதகமண்டலம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close