[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: மீனவர் கூட்டமைப்பு தீர்மானம்

fisheries-federation-resolution-to-close-sterlite-plant

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்களை தூத்துக்குடி மீனவர் கூட்டமைப்பினர் நிறைவேற்றியுள்ளனர்.

தூத்துக்குடி தோமையார் தேவாலயத்தில் பரதவர் மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரிழக்க காரணமான காவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும், மாவட்டத்திலுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த காவலர்‌களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும், இரவில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்துவதை நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி வீரபாண்டியபட்டணத்திலிருந்து திருச்செந்தூர்வரை பேரணியாக செல்லவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close